மாசிச் சம்பலில் (203 மில்லி கிராம்) பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளருக்கும் உற்பத்தியாளருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் கடுமையாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொதுச் சுகாதார பரிநோதகரினால், இந்த வழக்கானது அக்கரைப்பற்று நீதிமன்றில் உற்பத்தியாளரான கல்முனையைச் சேர்ந்தவருக்கும், விற்பனையாளரான அக்கரைப்பற்று காதிரியா கடற்கரை வீதியசை் சேர்நதவருக்கும், எதிராக 1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுக் கட்டளைச் சட்டத்தின்பிரிவு 13(1) இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற னௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்கள் குறித்த குற்றவாளிகளை கடுமையாக எச்சரித்துடன் இன்றைய தினம் தலா பத்தாயிரம் தண்டப் பணமும் விதித்து கட்டளை ஆக்கினார்..
இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்கைளை மீளவும் இவர்கள் செய்தால், உரிமமானது இரத்துச் செய்யப்படும் என்பதையும் எடுத்து இயம்பி இருந்தார்.
Post a Comment
Post a Comment