வி.சுகிர்தகுமார், யதுர்சன்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூளாவடி சந்திக்கு அன்மித்த பிரதான வீதியில் இன்று(15) காலை டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து காஞ்சிரங்குடா பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் இவ்விபத்தில் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து இடம்பெறவில்லை.
குறித்த வாகனத்தில் பயணித்த தேவகிராமத்தின் பங்குத்தந்தை ஒருவரும் இரு அருட்சகோதரிகளும் இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.
அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெறுகின்ற ஆராதனை வழிபாட்டிற்காக சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் குறுக்காக சென்ற மோட்டார் சைக்கிளுக்;கு வழிவிட எத்தணித்த நேரம் குறித்த வாகனத்தில் டயர் காற்றிழந்து வெடித்த காரணத்தினால் வான் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment