வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை






 பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை  (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் மற்றும் கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம். சித்தீக் உட்பட ஏனயை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்த டிஜிடல் திரையில் வர்த்தக நிலையங்கள் தமது வர்த்தக விளம்பரங்களை காணொளிகளாகவும் புகைப்படங்களாகவும் காட்சிப்படுத்த முடியும் எனவும் இதற்காக நாளாந்த, வாராந்த, மாதாந்த, வருடாந்த பெக்கேஜ் அடிப்படையில் கல்முனை மாநகர சபைக்கு கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது