பேராசிரியர் அச்சி முஹம்மது இஷாக் காலமானார்




 



பேராசிரியர் அச்சி முஹம்மது இஷாக்.

பேராசிரியர் அச்சிமுகம்மது இஷ்ஹாக் காலமானார். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - ஏ. ஷபாஅத் அஹமட் - நிந்தவூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரியின் பொறுப்பாளருமான பேராசிரியர் அல்ஹாஜ். அச்சிமுகம்மது இஷ்ஹாக் அவர்கள் நேற்றிரவு புனித மக்காவில் இறையழைப்பை ஏற்றுக்கொண்டார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன். தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது. அன்னாரின் ஜனாஸா தற்போது மக்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் பூர்வாங்க நடவடிக்கைகளின் பின்னர் மக்காவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இஷ்ஹாக் அவர்கள் நிந்தவூரைச் சேர்ந்த மர்ஹும் முத்துமுகம்மது ஹாஜியார், கதீஜா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற நஸ்லி இஷ்ஹாக்கின் பாசமுள்ள கணவரும், காலஞ்சென்ற பொறியியலாளர் பஸீல் ஏ. மஜீத் அவர்களின் மருமகனும், மெரீனா அப்துல் மஜீத் மஹ்றூப் அவர்களின் மச்சானும், மரியத்தின் சகோதரரும், காலஞ்சென்ற உதவி அரசாங்க அதிபர் இப்றாலெவ்வையின் மைத்துனரும், அல்ஹாஜ். எம். ரி. ஏ. தௌபீக் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார். அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசமாய் அமைய நிந்தவூர் - எனது மண் பிரார்த்திக்கிறது.


நிந்தவூரின் தீன்.
தொழுகையினை என்றும் இமாம்ஜாமாத்துடன் நிலையாக கடைப்பிடித்தார்.
ஜாவத்த பள்ளியில் இவருக்கு என்று பிரத்தியேக இடம் உண்டு.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் தொடர்ச்சியாக மறைந்த தலைவருக்கு பக்கபலமாக இருந்து பல உதவிகளை கட்சிக்காக செய்தவர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக அதிபராக (Chancellor) தனது ஓய்வு காலத்தில் கடமையாற்றினார்.
நிந்தவூரின் வளர்ச்சியில் மாத்திரம் அன்றி இலங்கையின் பல கிராமங்களில் இவரின் சேவை பலருக்கு தெரியாமல் நடந்துள்ளது.
புனித மக்கா நகரில் தனது உம்றா கடமையினை நிறைவேற்ற குடும்பத்துடன் சென்ற வேளை அவருக்கு இறை அழைப்பு கிடைத்துள்ளது.
அன்னாருக்கும் அன்னாரின் சந்ததிகளுக்கும் இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவனின் அருள் மென்மேலும் கிடைக்கட்டும்.