வெற்றி அடைந்த போட்டியாளர்களுக்கு கௌரவமளிப்பு !




 



மாளிகைக்காடு செய்தியாளர்


கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற தேசிய இலக்கிய விருது வழங்கல் விழாவின் ஆரம்பக்கட்டமாக  அம்பாரை மாவ‌ட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியடைந்த போட்டியாளர்களில் மாவ‌ட்ட மட்ட  போட்டிகளில்  பங்குபற்றி அதில் வெற்றியீட்டிவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவ‌ட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்ஸான் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவ‌ட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயராஜன் அவர்கள் கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டி கௌரவித்தார். மேலும் விசேட அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ரீ.கமலநாதன் அவர்களும் கலந்து கொண்டு வெற்றி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி வைத்தனர்.

மேற்படி போட்டியில் 6 பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 80 போட்டியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்