பாணம கிராமத்திற்கு வன்னி ஹோப் அமைப்பினால் நிவாரணம் வழங்கி வைப்பு...
அம்பாறை மாவட்டம் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாணம கிராமத்தில் லாகுகல பிரதேச செயலளார் திரு.நவநீதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு அவுஸ்ரேலியா வன்னி ஹோப் அமைப்பின் நிதி அனுசரனையில் மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர் K.தர்மராஜ் அவர்களின் ஊடாக பாணம பகுதியில் நாட்டில் ஏற்பட்ட தாழமுக்கதினால் ஏற்றபட்ட வெள்ளத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்ப மீனவர் மற்றும் விவசாய குடும்பங்களுக்கு 100நிவாரண உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.....
இன் நிகழ்வானது பாணம பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது....
இன் நிகழ்வில் லாகுகல பிரதேச செயலாளர் திரு.நவநீதராஜா மற்றும் உதவிச்செயலாளர் க.சதிசேகரன் மற்றும் வன்னி ஹோப் அமைப்பின் மட்டு அம்பாறை பொறுப்பாளர் K.தர்மராஜ் கிராம சேவையாளர் கிராம அபிவிருத்தி உத்தியோத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்....
ஜே.கே.யதுர்ஷன்
Post a Comment
Post a Comment