தேசிய கல்வியாளர் விருது பெற்ற,கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லிக்கு வாழ்த்துக்கள்!




 


தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நிப்தவூரைச் சேர்ந்த கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி

(சுலைமான் றாபி)
இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology) கல்வி அமைச்சுடன் இணைந்து, கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளர்களை ஆண்டுதோறும் கௌரவித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், கல்வி மற்றும் உயர்கல்வி என இரு பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பல கல்வியாளர்கள் தேசிய கல்வியாளர் விருதுடன் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு, உயர்கல்வித் துறையில் கணினியியல் (Computing) கற்கைகளுக்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப சிரேஷ்ட விரிவுரையாளர் நிந்தவூரைச் சேர்ந்த கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்கள் தேசிய கல்வியாளர் விருது பெற்றுள்ளார்.
குறித்த துறையில் அவர் மேற்கொண்ட கற்பித்தல், ஆய்வு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்புகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.
மேலும், பேராசிரியர் ராகல் (பேராதனை பல்கலைகழகம்) மற்றும் பேராசிரியர் ராமநாதன் (யாழ்ப்பாண பல்கலைகழகம்) ஆகியோரும் கணினியியல் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக தேசிய கல்வியாளர் விருது பெற்றுக்கொண்டனர்.
குறித்த நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நியூசிலாந்துக்கான இலங்கை தூதுவர் டேவிட் பைன் மற்றும் சிறப்பு அதிதியாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.