சுனாமி நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு







(சுகிர்தகுமார்)   


சுனாமி நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய வளாகம் சிரமதானப்பணி மூலம் இன்று (27)துப்பரவு செய்யப்பட்டது.
பாடசாலையின் அதிபர் தங்கவடிவேல் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அன்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இப்பாடசாலை வெள்ளத்தில் மூழ்கியதுடன் மிக மோசமாக பாதிக்கட்டது.
இதனால் பாடசாலையின் உட்புற வெளிப்புற சூழல் அசுத்தமடைந்திருந்தது.
ஆயினும் பாடசாலை எதிர்வரும் 2ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீளவும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி இச்சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இச்சிரமதானப்பணி மூலம் பாடசாலையில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டதுடன் டெங்கு பரவக்கூடிய இடங்களும் துப்பரவு செய்யப்பட்டன.
சுனாமி தின நினைவேந்தல் நிகழ்வாக மேற்கொள்ளப்பட்ட இச்சிரமதானப்பணி போல் பல சிரமதானப்பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு தன்னார்வலர்களாக முன்வந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.