ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் மோதிரம் போன்ற அணியக்கூடிய மின்னணு கருவிகளின் (Wearables) தொழில்நுட்பத்தில் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பல பில்லியன் டாலர்கள் புழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்துறை, மருத்துவ கண்காணிப்பு குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.
பல பிரீமியம் தயாரிப்புகள், உடற்பயிற்சி நடைமுறைகள், உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, மாதவிடாய் சுழற்சி, தூக்கம் போன்றவற்றை அவை துல்லியமாகக் கண்காணிப்பதாகக் கூறுகின்றன.
பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பின் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு அணியக்கூடிய மின்னணு கருவிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் பேசியுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான எதிர்வினைகள் போன்ற அறிகுறிகளை வீட்டில் இருந்தவாறே கண்காணிக்க இவை உதவும்.
ஆனால் பல மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அணியக்கூடிய மின்னணு கருவிகளால் சேகரிக்கப்படும் மருத்துவத் தரவுகளை எச்சரிக்கையுடனே அணுகுகிறார்கள்.
ஐ.வி.எஃப்: வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பது ஏன்? இதை மாற்ற முயற்சிக்கும் விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?
உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள்
15 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பாலியல் தொழிலாளியின் வடிவில் 'ஹோலோகிராம்' - எதற்காக?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அணியக்கூடிய மின்னணு கருவிகளின் எச்சரிக்கைகள்
நான் தற்போது அல்ட்ராஹியூமன் (Ultrahuman) எனும் நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட் மோதிரத்தை அணிந்து வருகிறேன். எனது உடல்நிலை சரியில்லை என்பதை நான் கண்டறிவதற்கு முன்பே அந்த ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடித்து விடுதாக நினைக்கிறேன்.
ஒரு வார இறுதியின்போது, என் உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்து இருப்பதாகவும், நான் சரியாகத் தூங்குவதில்லை என்றும் அது என்னை எச்சரித்தது. இது என் உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் அந்த ஸ்மார்ட் மோதிரம் என்னை எச்சரித்தது.
பெரிமெனோபாஸ் (Perimenopause) அறிகுறிகளைப் பற்றி படித்த பிறகும் நான் அதைப் புறக்கணித்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, வயிற்று வலியால் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
எனக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை, ஆனால் ஒருவேளை தேவைப்பட்டிருந்தால், நான் அணிந்திருந்த ஸ்மார்ட் மோதிரத்தின் தரவுகள், சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களுக்கு உதவியிருக்குமா?
இதுபோன்ற பல 'அணியக்கூடிய மின்னணு கருவி' பிராண்டுகள் மருத்துவர்கள் அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தீவிரமாக ஊக்குவிக்கின்றன.
உதாரணத்திற்கு, ஓரா ஸ்மார்ட் மோதிரம், நோயாளிகள் தங்கள் உடல்நிலை குறித்த தரவுகளை மருத்துவருடன் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், அவற்றை ஓர் அறிக்கை வடிவில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது.
புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?
11 டிசம்பர் 2024
நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!
12 டிசம்பர் 2024
ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிட உதவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஆதிக்கம் செலுத்துகிறது
ஓரா நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஜேக் டாய்ச், அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தரவுகள் 'ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவுவதாக' கூறுகிறார்.
ஆனால் இது எல்லா நேரத்திலும் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை.
மருத்துவர் ஹெலன் சாலிஸ்பரி ஆக்ஸ்போர்டில் பணிபுரிகிறார். நோயாளிகள் இடையே 'அணியக்கூடிய மின்னணு கருவிகளின்' பயன்பாடு அதிகரித்திருப்பதை அவர் கவனித்துள்ளார். அது குறித்த கவலையையும் அவர் வெளிப்படுத்துகிறார்.
"இத்தகைய கருவிகள் அனைத்து முக்கியமான நேரங்களிலும் கை கொடுப்பதில்லை. உடல்நலன் குறித்து எப்போதும் கவலைப்படும், உடல்நிலையை அதிகமாகக் கண்காணிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம் என்று நான் வருத்தப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற அசாதாரண தரவுகள் கிடைப்பதற்குப் பின்னால், ஒரு தற்காலிக உடல்நிலை மாற்றமோ அல்லது அந்தக் கருவியில் ஏற்பட்ட பிழை என ஏராளமான காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர் சாலிஸ்பரி கூறுகிறார்.
உடல்நலம் - ஸ்மார்ட் வாட்ச்பட மூலாதாரம்,Getty Images
"எப்போதுமே தங்கள் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு நாம் மக்களைத் தள்ளிவிடுவோமோ என்று நான் கவலைப்படுகிறேன். பிறகு தங்களின் உள்ளுணர்வைவிட மின்னணுக் கருவிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தக் கருவி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டும்போது, அவர்கள் மருத்துவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும்" என்கிறார் சாலிஸ்பரி.
எதிர்பாராத மருத்துவ நோயறிதலுக்கு எதிரான ஒரு வகை அரணாக, உளவியல் ரீதியில் இந்த மருத்துவத் தரவுகள் பயன்படுவதை அவர் விளக்குகிறார். உதாரணமாக, ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது செயலி, ஒரு பயங்கரமான, வீரியம் மிக்க புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை நிச்சயம் கண்டறியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார் அவர்.
"நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, இத்தகைய அணியக்கூடிய மின்னணுக் கருவிகள் செய்யும் ஒரு நல்ல விஷயம். ஆனால் அவற்றிடம் இருந்து நாம் பெறக்கூடிய சிறந்த ஆலோசனைகள், ஏற்கெனவே பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான்" என்று கூறுகிறார் சாலிஸ்பரி.
மேலும், "அதிகமாக நடப்பது, அதிகளவில் மது அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முயல்வது போன்றவைதான் நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியவை. இவையெல்லாம் ஒருபோதும் மாறாது," என்றும் அவர் தெரிவித்தார்.
தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை
9 டிசம்பர் 2024
வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு
10 டிசம்பர் 2024
இதய கண்காணிப்பு செயல்பாடு
சாலிஸ்பரிபட மூலாதாரம்,Helen Salisbury
படக்குறிப்பு,இந்தக் கருவிகள் வழங்கும் ஆலோசனைகள், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான் என்கிறார் சாலிஸ்பரி.
'ஆப்பிள் வாட்ச்' தான் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்ச் என்று கூறப்படுகிறது, இருப்பினும் சமீபத்தில் அதன் விற்பனை குறைந்துள்ளது.
ஆப்பிள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களது ஸ்மார்ட் வாட்சில் உள்ள 'இதய கண்காணிப்பு செயல்பாடு' காரணமாக உயிர் பிழைத்த நபர்களின் அனுபவங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துகிறது. அவற்றில் ஏராளமானவற்றை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இருப்பினும், அவற்றில் எத்தனை தருணங்களில் பிழையான தரவுகள், பிழையான எச்சரிக்கைகள் காட்டப்பட்டன என்பது குறித்து நான் கேள்விப்படவில்லை.
பல சந்தர்ப்பங்களில், நோயாளிகள் தாங்கள் 'அணியக்கூடிய மின்னணு கருவியின்' மூலம் கிடைத்த தரவை மருத்துவர்களுக்கு வழங்கும்போது, தங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி அதை மீண்டும் சோதித்துப் பார்க்கவே மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.
"இதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவை நடைமுறைக்கு ஏற்றவையும்கூட" என்று நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் 'அணியக்கூடிய மின்னணுக் கருவிகள்' தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியர் டாக்டர் யாங் வெய் கூறுகிறார்.
"நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் ஈ.சி.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம், உங்கள் இதயத்தின் செயல்பாட்டைச் சரிபார்க்கும் ஒரு சோதனை) அளவிடும்போது, அந்த இயந்திரம் சுவரில் மாட்டப்பட்டு இருப்பதால் அதன் மின் நுகர்வு பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார்.
"ஆனால் உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சை பொறுத்தவரை, அது தொடர்ந்து இயங்க சார்ஜ் தேவைப்படுகிறது. சார்ஜ் குறையும் என்பதால் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஈ.சி.ஜியை அளவிடப் போவதில்லை" என்கிறார்.
மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்
12 டிசம்பர் 2024
'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்
5 டிசம்பர் 2024
தரவுகளின் துல்லியம் குறைவதற்கான வாய்ப்பு
ஸ்மார்ட் வாட்ச்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும்
மருத்துவர் வெய் என் விரலில் இருக்கும் மோதிரத்தைச் சுட்டிக் காட்டினார்.
"இதயத் துடிப்பைப் பொறுத்தவரை, மணிக்கட்டில் இருந்து அல்லது இதயத்தில் இருந்து நேரடியாக அளவிடுவதுதான் சிறந்தது. இதுபோல விரலில் அளந்தால், அந்தத் தரவுகளின் துல்லியம் குறைய வாய்ப்புள்ளது" என்று அவர் கூறுகிறார்.
இதுபோன்ற தரவு இடைவெளிகளை நிரப்புவது மென்பொருளின் பங்கு. ஆனால் அணியக்கூடிய மின்னணு கருவிகளை இயக்கும் சென்சார்கள், மென்பொருள் அல்லது அதன் தரவு மற்றும் அது எந்த வடிவத்தில் சேகரிக்கப்படுகிறது என்பவை உள்பட, அந்தக் கருவிகளுக்கான சர்வதேச தரநிலை என எதுவும் இல்லை.
ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும். ஆனால் இதில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது.
பென் வுட் அன்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது, அவரது மனைவிக்கு, பென்னின் ஆப்பிள் வாட்சிலிருந்து தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகள் வந்தன. பென் வுட், ஒரு கார் விபத்தில் சிக்கியதாக அந்த அறிவிப்புகள் தெரிவித்தன.
அவசர சேவைகளுக்கு அழைப்பதற்கு கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கும் என்பதால், நேரடியாக அழைப்பதைவிட கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு அந்த அறிவிப்புகள் அறிவுறுத்தின.
அந்த எச்சரிக்கை அறிவிப்புகள் உண்மையானவையாக இருந்தன. மேலும் பென் வுட்டின் கைப்பேசியில் அவசரக்கால தொடர்பு எண்ணாக அவரது மனைவியின் எண் இருந்ததால், அவை அனுப்பப்பட்டன. ஆனால் இந்த விஷயத்தில் தேவையற்றதாகவும் அவை இருந்தன.
ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகளின் உடல்நிலை குறித்த தரவுகள் துல்லியமானவையா? மருத்துவர்கள் கூறுவது என்ன?பட மூலாதாரம்,Getty Images
காரணம் அப்போது பென் ஒரு கார் பந்தய டிராக்கில் சில பந்தய கார்களை வேகமாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அத்தகைய கார்களை ஓட்டுவதில் தனக்கு அதிக திறமை இல்லையென்றாலும்கூட, எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பென் வுட் கூறுகிறார்.
"உண்மையில் ஒரு விபத்து நடப்பதற்கும், அதுகுறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இடையிலான எல்லைகள் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். மின்னணு கருவிகளின் உற்பத்தியாளர்கள், அவசர சேவை முகமைகள், அதற்கு முதலில் பதில் அளிப்பவர்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று பென் வுட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
'கிங்ஸ் ஃபண்ட்' அமைப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பிரிதேஷ் மிஸ்திரி, நோயாளிகள் குறித்த தரவுகளை மருத்துவ அமைப்புகளில் உள்ளிடுவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு தெளிவான தீர்மானமும் இல்லாமல் பிரிட்டனில் பல ஆண்டுகளாக இதுகுறித்த விவாதம் நடந்து வருவதாக அவர் கூறுகிறார்.
மருத்துவமனைகளில் இருந்து சமூக அமைப்புகளை நோக்கி மருத்துவ கவனிப்புகளை நகர்த்துவதற்கான பிரிட்டன் அரசின் முயற்சியில், அணியக்கூடிய மின்னணு கருவிகள் முக்கிய பங்காற்றி இருக்கக்கூடும் என்று மிஸ்திரி நம்புகிறார்.
"எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை ஆதரிக்கக்கூடிய மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டிருக்க உதவும் வகையிலான உள்கட்டமைப்பு இல்லாமல் அது கடினமாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று மிஸ்திரி கூறுகிறார்.
Post a Comment
Post a Comment