இஸ்லாமியா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உதவியவர், ஒரு கைதியாகவே மரணத்த தழுவினார்




 



கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் தனது வாழ்வைப் பறிகொடுத்தவர் கோவை பாஷா அவர்கள். அவர் மட்டுமின்றி அவரது மகன் சித்திக் உள்ளிட்ட உறவினர்கள்  சிலரும் சிறைப்படுத்தப்பட்டு வாழ்வை இழந்தனர். இசுலாமியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தனது குடும்பமே சிறைப்படுத்தப்பட்ட நிலையிலும் அவர் மனம் தளராமல், கொண்ட கொள்கையில் உறுதி குலையாமல் நெஞ்சுரத்தோடு வாழ்ந்தவர்.  ஒரு கைதியாகவே மரணத்தைத் தழுவினார் என்பது வேதனைக்குரியது. என்றாலும் அது ஒரு வரலாறாக அமைந்துவிட்டது. அவரது மறைவு இசுலாமியர்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

அவரது இறுதி நிகழ்வில் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு உள்ளிட்ட ஏராளமான முன்னணித் தோழர்கள் பங்கேற்று அவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.