வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளத்துக்கான அணுகல் மீண்டும் பாதிப்பு!




 



கடந்த மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SL CERT) கூற்றுப்படி, திணைக்களம் கடந்த நவம்பர் 01 ஆம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியது.

இதன் விளைவாக இணையதளத்தின் சேவைகள் தடைபட்டன.

திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில மாற்றங்கள் காரணமாக இவ்வாறு இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக SL CERT கூறியிருந்தது.

முதற்கட்ட விசாரணைகள் வெளி தரப்பினரால் இணையத்தளத்தின் எந்த தரவுகளும் அணுகப்படவில்லை அல்லது திருடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் பாதிக்கப்பட்டுள்ளது.