மன்மோகன் சிங், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் ஒருவர். தார்மீகரீதியாக நேர்மையானவர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.
கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராகவும், அதற்கு முன்னர் நிதியமைச்சராகவும் இருந்தபோது, நாட்டின் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் உள்படப் பல முக்கியமான சீர்திருத்தங்களைச் செதுக்கிய சிற்பியாக அவர் கருதப்படுகிறார்.
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, முழு முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார்.
நாட்டின் உயர்மட்டப் பதவியை வகித்த முதல் சீக்கியரான மன்மோகன் சிங், சுமார் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்ட 1984 கலவரத்திற்கு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
ஆனால் அவரது இரண்டாவது பதவிக்காலம் அவரது நிர்வாகத்தை உலுக்கிய தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டது. 2014 பொதுத் தேர்தலில் அவரது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு இந்த ஊழல்கள் முக்கியக் காரணம் என்று பலர் கூறுகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செய்த மாயாஜாலம்: 30 ஆண்டு கால தாராளமய பொருளாதாரம்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மன்மோகன் சிங், 26 செப்டம்பர் 1932 அன்று, பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். தண்ணீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகளற்ற பகுதியாக அது இருந்தது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், பின்னர் ஆக்ஸ்போர்டில் டிஃபில் (DPhil) பட்டமும் பெற்றார்.
கேம்பிரிட்ஜில் படிக்கும்போது, அவர் நிதிப் பற்றாக்குறையில் தவித்தார். அவரது மகள் தமன் சிங், தனது பெற்றோரைப் பற்றிய ஒரு புத்தகத்தில் இது குறித்து எழுதியுள்ளார்.
"அவரது கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஆண்டுக்கு சுமார் 600 யூரோவாக (இந்திய மதிப்பில் 57,246 ரூபாய்) இருந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகம் அவருக்கு உதவித்தொகையாக அவருக்கு சுமார் 160 யூரோ (ரூ.15,266) வழங்கியது."
"மீதமுள்ள செலவுகளுக்கு அவர் தனது தந்தையைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. மன்மோகன் மிகவும் சிக்கனமாக வாழ்ந்தார். உணவு விடுதியில் மானிய விலையில் வழங்கப்படும் உணவு ஒப்பீட்டளவில் மலிவானதாக இருந்தது."
தமன் சிங் தனது தந்தையின் கடினமான வாழ்க்கை முறை குறித்து நினைவு கூர்ந்தார். "அவர் முற்றிலும் உதவியற்றவராக இருந்தார். அவரால் ஒரு முட்டையை வேகவைத்துச் சாப்பிடவோ, தொலைக்காட்சியை இயக்கவோ முடியவில்லை."
மன்மோகன் சிங்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலமானார்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?
26 டிசம்பர் 2024
ஒருமித்த கருத்தை உருவாக்குபவர்
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தை மீட்டது முதல் இரண்டாவது முறை பிரதமர் ஆனது வரைபட மூலாதாரம்,Getty Images
மன்மோகன் சிங் 1991ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதியமைச்சர் பதவியைப் பெற்றதன்மூலம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றார். நாடு திவாலாகிக் கொண்டிருந்தபோது அவர் பொறுப்பேற்றார்.
அவரது எதிர்பாராத நியமனம், ஒரு கல்வியாளராகவும் அரசு ஊழியராகவும் அவரின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையை நிறைவு செய்தது. அவர் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். மேலும் ரிசர்வ் வங்கியின் ஆளுநரானார்.
நிதியமைச்சராகத் தனது முதல் உரையில் அவர் விக்டர் ஹ்யூகோவை மேற்கோள் காட்டி, "ஒருவருக்கான காலம் கைகூடினால், பூமியில் எந்த சக்தியும் அவரின் சிந்தனைகளை நிறுத்த முடியாது" என்று கூறினார்.
இந்த வார்த்தைகள் ஒரு லட்சிய மற்றும் முன்னோப்போதும் இல்லாத ஒரு பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்கான ஆரம்பப் புள்ளியாகச் செயல்பட்டது. அவர் வரிகளைக் குறைத்தார், ரூபாயின் மதிப்பைக் குறைத்தார், அரசு நடத்தும் நிறுவனங்களை தனியார்மயமாக்கினார், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்தார்.
பொருளாதாரம் புத்துயிர் பெற்றது, தொழில்துறை உயர்ந்தது, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் 1990களில் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்தன.
டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை 'வாங்க விரும்புவது' ஏன்? சீனாவை சமாளிக்க அது உதவுமா?
26 டிசம்பர் 2024
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி - எஃப்.ஐ.ஆரை முடக்கிய காவல்துறை
26 டிசம்பர் 2024
'தற்செயலாக வந்த பிரதமர் பதவி'
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தை மீட்டது முதல் இரண்டாவது முறை பிரதமர் ஆனது வரைபட மூலாதாரம்,Getty Images
மன்மோகன் சிங் தனக்கு அரசியல் பின்புலம் இல்லை என்பதை நன்கு அறிந்த ஒரு மனிதர்.
"ஒரு அரசியல்வாதியாக இருப்பது நல்லது, ஆனால் ஜனநாயகத்தில் ஒரு அரசியல்வாதியாக இருக்க ஒருவர் முதலில் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும்" என்று அவர் ஒருமுறை கூறினார்.
கடந்த 1999ஆம் ஆண்டில் அவர் இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்கடிக்கப்பட்டார். அதற்குப் பதிலாக அவர் தனது சொந்த காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் அமர்ந்தார். 2004ஆம் ஆண்டும் இதேதான் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2004ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை நிராகரித்தபோது மன்மோகன் சிங் முதன்முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி தனது இத்தாலிய வம்சாவளி என்ற பிம்பம் மீதான விமர்சனங்களில் இருந்து கட்சியைப் பாதுகாப்பதற்காக வெளிப்படையாகப் பதவியை நிராகரிக்கும் முடிவை எடுத்தார்.
இருப்பினும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சோனியா காந்தி உண்மையான அதிகார மையமாக இருந்ததாகவும், அவர் ஒருபோதும் உண்மையான பொறுப்பில் இல்லை என்றும் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.
அவரது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தில் மிகப்பெரிய வெற்றி, அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியா அணுகுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுதான். அதன் மூலம், அணுசக்தி விவகாரத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சூழல் மாறியது.
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தை மீட்டது முதல் இரண்டாவது முறை பிரதமர் ஆனது வரைபட மூலாதாரம்,Getty Images
ஆனால் இந்த ஒப்பந்தம் பல பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் அரசின் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றன. மேலும், காங்கிரஸ் மற்றொரு கட்சியின் ஆதரவைப் பெற்று, இழந்த கூட்டணி எண்ணிக்கையை ஈடுசெய்ய வேண்டியிருந்தது. அப்போது நாடாளுமன்ற வாக்குகளை விலைக்கு வாங்கிய குற்றச்சாட்டும் காங்கிரஸ் மீது சுமத்தப்பட்டது.
ஒருமித்த கருத்தை உருவாக்கும் மன்மோகன் சிங், பிராந்திய கூட்டணிக் கட்சிகளையும் ஆதரவாளர்களையும் திறம்படக் கையாண்டார். அவர்கள் சில நேரங்களில் சவாலாகவும், சில நேரங்களில் இடையூறு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டனர்.
அவர் தனது நேர்மை மற்றும் புத்திசாலித்தனத்திற்காக நற்பெயரைப் பெற்றிருந்தாலும், மென்மையானவர், முடிவெடுக்காதவர் என்ற பெயரையும் கொண்டிருந்தார். அதோடு அவரது ஆட்சிக்காலத்தில் சீர்திருத்தத்தின் வேகம் குறைந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறினர்.
நிதியமைச்சராக இருந்தபோது தெரிந்த அதே வேகத்தை அவர் பிரதமராக அடையத் தவறிவிட்டதாகவும் சில விமர்சகர்கள் கூறினர்.
கடந்த 2009ஆம் ஆண்டில் இரண்டாவது, தீர்க்கமான தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸை மன்மோகன் சிங் வழிநடத்தினார். காங்கிரஸ் கட்சி "சூழலுக்கு ஏற்றவாறு உயரும்" என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால் அந்தப் பிரகாசம் விரைவில் மங்கத் தொடங்கியது. அவரது இரண்டாவது பதவிக்காலம் பெரும்பாலும் விமர்சனங்களின் ஊடக செய்திகளில் இடம்பிடித்தது. அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட பல ஊழல்கள், நாட்டிற்கு கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் ஒரு பெரியளவிலான கொள்கை முடக்கம் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
சிறையும் போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை - 100 வயதிலும் கொண்டாடப்படும் நல்லகண்ணு
26 டிசம்பர் 2024
விஜய், திமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் பற்றி திருமாவளவன் பிபிசி தமிழுக்கு பேட்டி
25 டிசம்பர் 2024
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தை மீட்டது முதல் இரண்டாவது முறை பிரதமர் ஆனது வரைபட மூலாதாரம்,Getty Images
அப்போதைய எதிர்ல்கட்சியான பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மன்மோகன் சிங்கை இந்தியாவின் "பலவீனமான பிரதமர்" என்று அழைத்தார்.
ஆனால், சிங் இதை மறுத்தார். தனது அரசாங்கம் "நாட்டிற்காகவும் அதன் மக்களின் நலனுக்காகவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாக" தெரிவித்தார்.
நடைமுறை வெளியுறவுக் கொள்கை
மன்மோகன் சிங் தனது வெளியுறவுக் கொள்கையில், தனது இரண்டு முன்னோடிகள் பின்பற்றிய நடைமுறை அரசியலை ஏற்றுக்கொண்டார்.
அவர் பாகிஸ்தானுடன் சமாதான முன்னெடுப்புகளைத் தொடர்ந்தார். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் தாக்குதல்களால் இந்த அணுகுமுறை பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம், நவம்பர் 2008 மும்பை துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதலின்போது உச்சகட்டத்தை அடைந்தது.
அவர் சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திபெத் செல்வதற்கான நாது லா கணவாய் பாதையை மீண்டும் திறப்பதற்கான ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவியை அதிகரித்தார், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியத் தலைவர் ஆனார்.
இந்தியாவின் பழைய நட்பு நாடான இரானுடன் உறவுகளை முறித்துக் கொள்வது போன்ற சூழலை உருவாக்கியதன் மூலம் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அவர் கோபப்படுத்தினார்.
அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?
25 டிசம்பர் 2024
ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்
புகழை விரும்பாத தலைவர்
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தை மீட்டது முதல் இரண்டாவது முறை பிரதமர் ஆனது வரைபட மூலாதாரம்,Getty Images
ஒரு அறிவார்ந்த கல்வியாளர் மற்றும் முன்னாள் அதிகாரியான அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்வதை விரும்பாதவர். எப்போதும் புகழை விரும்பாத, தன்னடக்கமான மனிதராகவே அறியப்பட்டவர். அவரது ட்விட்டர் கணக்கு பெரும்பாலும் அதிக பதிவுகளின்றி, குறைந்த ஃபாலோயர்களுடனே காணப்படும்.
அவர் மிகவும் குறைவாகவே பேசக்கூடிய, அமைதியான மனிதராக இருந்தபோதிலும், அவருக்குப் பல ஆதரவாளர்கள் இருந்தனர்.
கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான உரிமங்களை சட்டவிரோதமாக ஒதுக்கியது தொடர்பான நிலக்கரி ஊழல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "ஆயிரக்கணக்கான பதில்களைவிட இது சிறந்தது" என்று கூறி இந்த விவகாரத்தில் மௌனம் காத்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டில், குற்றவியல் சதி, நம்பிக்கை மீறல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனால் வருத்தமடைந்த மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம், "சட்ட விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும்", "உண்மை வெல்லும்" என்றும் கூறினார்.
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தை மீட்டது முதல் இரண்டாவது முறை பிரதமர் ஆனது வரைபட மூலாதாரம்,Getty Images
அவர் பிரதமராக இருந்த பிறகு, வயது முதிர்ந்த போதிலும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக அன்றைய பிரச்னைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 2020இல், அவர் பிபிசிக்கு அளித்த ஓர் அரிய நேர்காணலில், நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்கு அனுப்பிய கோவிட் பேரிடரின் பொருளாதார சேதத்தைத் தடுக்க இந்தியா "உடனடியாக" மூன்று படிகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அரசாங்கம் மக்களுக்கு நேரடி நிதி உதவிகளை வழங்க வேண்டும், தொழில்களுக்கு மூலதனம் கிடைக்க வழிசெய்ய வேண்டும், நிதித் துறையை சரிசெய்ய வேண்டும், என்று அறிவுறுத்தினார்.
இறுதியில், மன்மோகன் சிங் இந்தியாவை பொருளாதாரம் மற்றும் அணுசக்தி தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே கொண்டு வந்ததற்காக வரலாற்றில் நினைவில் கொள்ளப்படுவார். இருப்பினும் சில வரலாற்று ஆசிரியர்கள் அவர் முன்னதாகவே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கக்கூடும்.
"சமகால ஊடகங்களைவிட, நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளைவிட வரலாறு என்னைக் கனிவாக நடத்தும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் 2014ஆம் ஆண்டு நேர்காணலில் குறிப்பிட்டார்.
மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
Post a Comment
Post a Comment