சுனாமி தின நினைவேந்தல் நிகழ்வுகள்






 வி.சுகிர்தகுமார்    


 20 ஆவது ஆண்டு நிறைவு சுனாமி தின நினைவேந்தல் நிகழ்வுகள் அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலும் இன்று (26) காலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
தம்பிலுவில் தம்பட்டை பெரியமுகத்துவாரத்தின் கடற்கரை அருகே அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபியிலும் சுனாமி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட தம்பிலுவில் சைவநெறிக்கூட அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கணேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயிர்நீத்தவர்களின் உறவுகளும் அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நினைவுத்தூபி அருகே நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் உயிர்நீத்தவர்களின் நினைவாக தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.