சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு





 நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன்  திருக்கோவில் பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 100 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழித் தொடர்பாடல் பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் புனித சூசையப்பர் பாலர் பாடசாலை மண்டபத்தில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.T. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் A.ஆன்ஸி யுரேமினியின் ஒருங்கிணைப்பில் 20.12.2024 ம்  திகதியன்று நடைபெற்றது. 


இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. S. நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.U . அனோஜா, கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு.A. கந்தசாமி, பாடநெறியின் வளவாளர் திரு. S. சுதேஷ் ருஷாந்தன் மற்றும் முன்பள்ளி கல்விக்கு பொறுப்பான வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 மேலும் பாட நெறியை பூர்த்தி செய்த முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் பெற்றுக் கொண்ட மொழித்தேர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன


ஜே.கே.யதுர்ஷன்..