மத்தியமுகாமில் வெளிநோயாளர் பிரிவு




 



நூருல் ஹுதா உமர்


மத்தியமுகாம் பிரதேச வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு இன்று (07) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு தேவையான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். சாபி  அவர்களும் விசேட அதிதிகளாக பங்குபற்றியதுடன் விசேட உரைகளையும் நிகழ்த்தினர்.

இதன்போது பற்சிகிச்சை பிரிவின் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க குழுவினருடன் விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் மற்றும் நோயாளிகளுக்கான சேவையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் இந்நிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டன.