தாவூத் லெப்பை அப்துல் மனாப் 1963 டிசம்பர் 24 இல் மருதமுனையில் பிறந்தவர்.தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியினை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா ஆகியவற்றிலும் கா.பொ.த. உயர்தர வகுப்பை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்றார்.
ஷம்ஸ் மத்திய கல்லூரி மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டபின் 1983ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய முதல் தொகுதி மாணவர்களுள் மனாப் அவர்களும் ஒரு மாணவனாகத் தோற்றி அப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை மாணவனாக இணைந்துகொண்டார்.
1990ல் சட்டப்பட்டதாரியாக வெளி யேறிய இவர் அவ்வாண்டிலேயே சட்டக்கல்லூரி கற்கை நெறியினையும் பூர்த்தி செய்தார்.
1991 முதல் 2000ஆம் ஆண்டுவரை ஒரு சட்டத்தரணியாக உயர்நீதி மன்றம். மேன்முறையீட்டு நீதிமன்றம் அடங்கலாகப் பல நீதிமன்றங்களில் தனது வழக்காடு திறமைகளை வெளிப்படுத்தினார்.
01-10-2000ல் நீதிபதியாக நியமனம் பெற்ற மனாப் அவர்கள் கொழும்பு, திருகோணமலை, மூதூர், பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் மேலதிக நீதிவானாகவும் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றினார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்ட முதுமானி பரீட்சையில் விசேட சித்தியினையும் பெற்று இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
#இறுதியாக
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி ஓய்விற்கு செல்கிறார்.
இவரது ஓய்வு காலம் சிறக்க நாமும் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
Post a Comment
Post a Comment