ஜே.கே.யதுர்ஷன்..
தம்பிலுவில்
எமது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழிப் பாட நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 13 அரச நிறுவனங்களை சேர்ந்த 99 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.T.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்ஸி யுரேமினியின் ஒருங்கிணைப்பின் கீழ் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.S. நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.U. அனோஜா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. தேவமுரளி, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளரான A. M.M. முஜீப் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பாட நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் தாம் பெற்றுக் கொண்ட மொழித்தேர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Post a Comment
Post a Comment