நிப்ராஸ் லத்தீப் / நூருல் ஹுதா உமர்
கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நடைபெற்ற இரத்த தான முகாம் இன்று (21) கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழும் குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம் ஒவ்வொரு வருடமும் இந்த இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
இன்றைய நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸாரா ஷராப்தீன், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் குழாம், தாதிகள், உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரி, கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப்பலரும் கொண்டனர்.
Post a Comment
Post a Comment