பாறுக் ஷிஹான்
வெள்ளப் பாதிப்பிற்குள்ளான துரைவந்தியமேடு மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளப் பாதிப்பிற்குள்ளான துரைவந்தியமேடு மக்களுக்கு குளியாப்பிட்டிய நெவகட செல்கிரி விகாரஸ்தான கலன மித்துரு சங்கத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம சேவகர் கலந்து கொண்டனர்.
மழை வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட துரைவந்தியமேடு பகுதியில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் வெள்ள நீர் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் பெறுமதியான உணவுப் பொருட்களை அவ்வமைப்பு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த உணவு பொதியில் அரிசி,பருப்பு,சீனி,பால் மா ,பிஸ்கட் ,டின் மீன், நெத்தலி,உப்பு,தேயிலை,மிளகாய்த்
Post a Comment
Post a Comment