பற்றிமாவின் "சாதுரிய காக்கையார்" சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள்




 



(வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின்  "சாதுரிய காக்கையார்" என்ற சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அரச சிறுவர் நாடக விழா - 2024  விருதுகள் வழங்கும் நிகழ்வு 
கொழும்பு அலரி மாளிகையில் நேற்று(1) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அதன் போது குறித்த நாடகத்திற்கு பல விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

 இந்த வருடத்திற்கான சிறந்த பிரதியாக்கத்திற்கான  முதலாமிட விருது "சாதுரிய காக்கையார்" நாடகத்திற்காக  பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சுகன்யா ரவீந்திரகுமாருக்கு வழங்கப்பட்டது.