எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையும் இனிய வருடமாக அமைந்திட மனங்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை www.ceylon24.com குழுமம் வழங்குகின்றது.
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். புத்தாண்டை கொண்டாடி வரவேற்கும் அதே வேளையில் அன்புக்குரியவர்களிடம் வாழ்த்துகளை பகிர்வதும் சிறப்பான விஷயமாகும். 2025ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்திட நண்பர்களுடனும், குடும்பத்தினருடம் பகிர வேண்டிய வாழ்த்துகள்
2025 புதுவருடம் உதயமானது; முதன் முதல் வரவேற்ற நாடு மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி(Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.
மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியை தரும் ஆண்டாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள்
புத்தாண்டில் புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
Post a Comment
Post a Comment