"பசுமை விதை செம்மல் விருது-2024"




 


நூருல் ஹுதா உமர்


இந்திய தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்ட "பசுமை வாசல்  பவுண்டேஷன்" அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட மரக்கன்றுகள் நடும் போட்டியில் வெற்றி பெற்ற கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி கற்று வரும் இலங்கையின் இளம் பசுமை மீட்சி செயற்பாட்டாளர் மின்மினி மின்ஹாவுக்கு "பசுமை விதை செம்மல் விருது-2024" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது 10 வயதிலிருந்து மாவட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளையும், கௌரவ பட்டங்களையும் பெற்றுக் கொண்ட சிறுமி ஆவார். 10 லட்சம் நபர்களினை இலக்காக கொண்டு "சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி" என்ற சாதனைக்குரிய இவர் சுயாதீன முறையில் கல்வி, நிர்வாக உயரதிகாரிகளின் அனுமதியுடன் சுற்று சூழல் தேசிய வேலைத் திட்டத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் முன்னிலையில் விழிப்புணர்வு உரையையும் மேற்கொண்டு வருகிறார்.