வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதி தேர்தலிலே ஜனாதிபதிக்கு வாக்களிக்காதவர்கள் கூட பாராளுமன்ற தேர்தலில் திசைக்காட்டிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இதனை அம்பாரையில் நடைபெற்ற கூட்டத்தில் அணிதிரண்டு கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட வேட்பாளர் ஆர்.எம்.அன்ரன் தெரிவித்தார்.
நேற்று மாலை (08) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு வருகை தந்த வேட்பாளர்களுக்கு மக்கள் வரவேற்பளித்தனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் எம்மை இதுவரைக்கும் ஆட்சி செய்தவர்கள் எங்கள் மீது சுமைகளை சுமத்தி கஷ்டமான சூழ்நிலைக்குள் தள்ளி அவர்கள் ஆடம்பர வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டனர்.
நாட்டிலே சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் கஷ்டமான சூழலில் வாழ்க்கின்றனர். ஆனாலும் சிலரது வீரவசனங்களை கேட்டு மக்கள் தேசிய கட்சிகள் என சொல்லப்படும் சில கட்சிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினர். இதனால் சாதித்தது ஒன்றுமேயில்லை. எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
ஆகவே இதனை மாற்றவேண்டுமானால் திசைக்காட்டிக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளர் வசந்த பியதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment