உரிமையோடு அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்துவோம். இதுவே எனது நோக்கமாகவும்





(சுகிர்தகுமார்)  


 புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் எனும் நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை வென்றெடுப்போம் என தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கே.இந்துனேஷ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
புதிய ஜனாதிபதி நேர்மையானவர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர். அவரது காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்பாராயின் அவரோடு இணைந்து பயணிப்பதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.
கடந்த காலத்தில் நாம் உரிமை சார்ந்த விடயங்களுக்கே முக்கியவத்தும் வழங்கினோம். இருப்பினும் இனிவரும் காலத்தில் உரிமையோடு அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்துவோம். இதுவே எனது நோக்கமாகவும் அமைந்துள்ளது. ஆகவே அம்பாரை வாழ் மக்கள் அனைவரும் என்னை ஆதரித்து வெற்றி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் ஒன்றுபட்டு இத்தேர்தலில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் அடைந்தாலும் கூட எதிர்காலத்தில் அனைவரையும் அரவணைத்தே நாம் செல்வோம். ஆனாலும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை தவிர்த்து தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசு கட்சியினை ஆதரிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.