கௌரவிப்பு !




 நூருல் ஹுதா உமர்


இறுதியாக வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் 2ம் இடத்தை பெற்றமைக்காக கல்முனை வலய கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வும், மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலய பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம் எஸ் சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டார். அவரது கல்வி சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல் சம்சுதீன், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திக் நிறைவேற்றுக் குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிசாத், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு பத்திரங்களும் கையளிக்கப்பட்டது.