ஜனாசா, அகழ்ந்து எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது





புதுப்பிக்கப்பட்டது

அக்கரைபற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களின் பிரசன்மத்துடன் இந்த ஜனாசா அட்டாளச்சேனை மையவாடியில் இன்று தோண்டி எடுக்கப்பட்டு அம்பாரை சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. குறித்த துன்பியல் சம்பவத்துடன் சம்மந்தப்பட்டதாகச் சொல்லப்படும், அவரது கணவர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 6ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி-
அட்டாளைச்சேனையில் மர்மான முறையில் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவரது  ஜனாசா இன்றைய தினம் மீளவும் பிரேதப் பரிசோதனைக்காகத்  தோண்டப்படவுள்ளது.இதற்கென அம்பாரையிலிருந்து  தடயவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். அக்கரைபற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களின் பிரசன்மத்துடன் இந்த ஜனாசா அட்டாளச்சேனை மையவாடியில் இன்று மாலை அகழ்ந்தெடுக்கப்படவுள்ளது.

குறித்த துன்பியல் சம்பவத்துடன் சம்மந்தப்பட்டதாகச் சொல்லப்படும், அவரது கணவர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 6ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.