அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை -மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு​





 


தற்போது நாட்டின் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.


இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் கரைவலை தோணிகள் உட்பட தமது மீன்பிடி உபகரணங்களை கடற்கரையில் இருந்து நீண்ட தூரத்திற்கு பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைத்துள்ளனர்.


அடைமழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரினால் நிரம்பி வருகின்றன. வங்களா விரிகுடா கடற்கரையில் ஏற்பட்டுள்ள காற்று தாழமுக்கம் காரணமாக தற்போது இந்த காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதேவேளை மீனவர்கள் மற்றும் பொது மக்களை தொடர்ந்தும் பாதுகாப்பாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.