அக்கரைப்பற்றில் பட்டப்பகலில் வீடொன்றில் கொள்ளை




  



வி.சுகிர்தகுமார்                                        


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 9 ஆம் பிரிவில் பட்டப்பகலில் வீடொன்றில் நுழைந்த திருடன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று (18) ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் அவ்வீட்டின் அலுமாரியில் இருந்த 3 தங்க மோதிரம் 25000 ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள நிலையில் பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் திருடணை பிடிப்பதற்கான விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்று (18) வீட்டின் உரிமையாளரின் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் அவ்வீட்டில் வசித்து வந்த வீட்டு உரிமையாளரின்; தாய் தந்தையும் திருகோணமலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் தனியாக இருந்த அப்பெண் அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சுமார் ஒரு மணி தாண்டியதன் பிற்பாடு வீட்டு உரிமையாளரின் தங்கை அவசரமாக அவரை அழைத்து அருகில் இருந்த வீட்டில் இருந்து ஒருவன் மதில் மேலால் பாய்ந்து செல்வதாக அறிவித்துள்ளார். உடன் வருகை அந்த அவர் வீட்டை திறந்து பார்க்கையில் வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த திருடன் அறையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த மோதிரம் மற்றும் பணம் உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதை அவதானித்து பொலிசாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இதேநேரம் குறித்த வீட்டில் திருடிய கள்வன் அருகில் இருந்த இன்னுமொரு வீட்டில் திருட முற்பட்டுள்ளதையும் முடியாமல் போகவே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளதையும் அருகில் இருந்த சீசிடிவி கமாராவில் பதிவு செய்யப்டடுள்ள காட்சிகள் மூலம்; தெரிய வருகின்றது.
அக்கரைப்பற்று பகுதியில் பல வீடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் பொலிசார் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி திருடர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.