வி.சுகிர்தகுமார்
வட்டமடு மேய்ச்சல் தரை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தீர்வை பெற்றுக்கொடுத்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். அத்தீர்விற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். அதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்த ஆவணத்தை யாராவது காண்பித்தால் அவருக்கு சல்யூட் அடித்து வரவேற்பதற்கும் தயாராக இருக்கின்றோம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் நேற்றிரவு (10) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுக்கூட்;டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தீர்வை பெற்றுக்கொடுத்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். அவ்வாறான தீர்விற்காக ஏங்கி தவிக்கின்றோம். அவ்வாறு தீர்வை பெற்றுக்கொடுத்தால் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.
வட்டமடு மேய்ச்சல் தரைக்கான பால் பண்ணையாளர் சங்கம் தொடராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது பாராமுகமாக இருந்து விட்டு ஒரு நாள் கூட எட்டிப்பார்க்காத அவர் மதில் மேல் பூனையாக இருந்துவிட்டு இன்று தீர்வை பெற்றுக்கொடுத்துவிட்டதாக கூறுகின்றார்.
அவரது தலைவர் சம்மந்தன் ஐயா அடுத்த தீபாவளிக்கு பொங்கலுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக அப்போது கூறினார். அவ்வாறு ஏதும் நடந்ததா? அதுபோல் பாராளுமன்றத்தில் இவர் கொட்டாவி விட்டுவிட்டு தீர்வை பெற்றுக்கொடுத்துவிட்டதாக கூறினால் சரியா என கேள்வி எழுப்பினார்.
ஆயினும் இதுவரைக்கும் மேய்ச்சல் தரைக்கு தீர்வு எமக்கு கிட்டவில்லை. அதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். 2011 முதல் 2024 வரை ஒரு சதம் பெறாமல் மண்ணிற்றாக மக்களுக்காக தமிழ் இனம் என்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல சட்டத்தரணி விவேகானந்தன் ஐயாவின் புதல்வர் புவிதரன் ஐயா அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் அவர்களும் தம்பு ஐயா அவர்களும் இன்னும் பல சட்டத்தரணிகளும் ஒரு சதம் வாங்காமல் வழக்கு பேசி கொண்டிருக்கும்போது இவர்கள் பெற்றுக்கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். இவ்வாறு கூறி மாட்டுக்காரர்களின் வாக்கு பெற முயற்சிப்பதைவிட வேறு வழியில் முயற்சி செய்யுங்கள் என்றார்.

Post a Comment
Post a Comment