தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்று (08) மாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும கிடைக்காதவர்கள் மீண்டும் மேன்முறையீடு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பின் அத்தகைய தரப்பினருக்கு அரசியல் தலையீடுகள் இன்றி குறுகிய காலத்திற்கு சில கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் புதிய பாடசாலை தவணை அமலுக்கு வருகிறது.
"டிசம்பரில் பாடசாலை தவணை முடிவடைந்தாலும், அடுத்த புதிய பாடசாலை தவணை ஜனவரி இறுதியில் தொடங்கும் என்பதை நாங்கள் அறிவோம்
Post a Comment
Post a Comment