( வி.ரி. சகாதேவராஜா)
நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு அம்பாறை பிரதான வீதி இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை முதல் அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. அங்கு பலர் பலியான சம்பவமும் இடம்பெற்றது தெரிந்ததே.
அதனால் காரைதீவு - அம்பாறை பிரதான வீதி தொடர்சியாக போக்குவரத்துக்காக நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்தது.
வீதி மற்றும் பாலங்களின் தன்மையை தொழில்நுட்ப பரிசீலனை செய்யப்ட்டு அறிக்கை கிடைத்தவுடன் பாதை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் படி இன்று வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப அறிக்கை கிடைக்கப் பெற்றதும் வீதி திறந்து விடப்பட்டது.
வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் முற்றாக வடிந்து விட்டது.
இருப்பினும் மேலுமொரு சடலம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தேடுதல் தொடர்கிறது.
Post a Comment
Post a Comment