கணித முகாம்






 ( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் கணித முகாம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கணித முகாம்  மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றதை பலரும் பாராட்டினர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கணிதப் பிரிவின் தலைவர் திருமதி தயாமதி பியோஜுட் நவீந்தன்( காரைதீவு )கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஷா கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கணித செய்முறை விளக்கம் பலரையும் கவர்ந்தன.