2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது
இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.
இந்தத் தேர்தலில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கென 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354. இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.
தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment