இராஜகிரியவில் உள்ள வாகன திருத்துமிடம் (கேரேஜ்) ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், கோட்டை தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் கொழும்பு மாநகரசபையிலிருந்து இரண்டு வாகனங்களும் கோட்டே மாநகரசபையிலிருந்து 03 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டது.
எனினும் தீயில் பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிகிறது, தீ வேகமாகப் பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருந்தது.
Post a Comment
Post a Comment