தமிழர் முஸ்லிம் பகுதிகளில் தேசியக் கட்சி ஆழ ஊடுவித் தாக்கியுள்ளது




 


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னிலையில் உள்ளது.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,772,197 (97 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,955,688 (26 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 488,401 (2 ஆசனம்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 347,706 (2 ஆசனம்)
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) – 252,548 (3 ஆசனம்)
  • சர்வஜன அதிகாரம் (SB) - 176,204 - (0 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 82,201 (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் - 914,240 (5 ஆசனம்)