( வி.ரி.சகாதேவராஜா)
கனடாவில் நேற்று இரவு துரதிஷ்டவசமாக மரணித்த யாழ் அரியாலையைச் சேர்ந்த சிறந்த தமிழினப் பற்றாளர் குலத்துங்கம் மதிசூடி அண்ணாவின் இழப்பு தமிழ் இனத்திற்கு ஒரு பாரிய பேரிழப்பாகும்.
என்று பிரபல சமூக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக்கட்சி காரைதீவு தலைவரும் ,மீனாட்சி அம்மன் ஆலய தலைவரும் ,முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது அனுதாப அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவரது திடீர் மறைவு குறித்து கவலையுடன் ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில்.
பிறந்த மண்ணை வெகுவாக நேசித்த தமிழினப் பற்றாளர் திரு.மதி அண்ணா அவர்கள். கொரோனா காலகட்டத்திலும் வெள்ள அனர்த்த காலகட்டத்திலும் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் பாரிய சேவைகளை செய்தவர்.
அது மாத்திரமல்ல ஒவ்வொரு வருடமும் வந்து நலிவுற்ற மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து வந்தவர்.
எமது மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் சில ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்து பல ஆக்கபூர்வமான பல திட்டங்களிலும் பங்கெடுத்தவர் .
அவர் தமிழினத்தின் மிகுந்த பற்றாளராக விளங்கியவர். கனடாவில் கடந்த 40 வருடங்களாக தாயக மக்களின் உணர்வுகளை விளங்கிடச் செய்தவர்.
ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இறுதியாக காரைதீவு பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய கன்னி தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனடா இருந்து வந்தவர் . சேவையாளரான அவர் அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் திறந்து வைத்த சுவாமி விவேகானந்தர் நினைவு பூங்காவையும் ஆர்வத்துடன் பார்வையிட்டவர்.
அவரது இழப்பையிட்டு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.
Post a Comment
Post a Comment