வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் இன்று (02) ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அமைதியான முறையில் குறித்த பகுதியில் தாம் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டபோதே தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் தமது வாகனத்தில் குறித்த வேட்பாளரின் ஸ்டிக்கர்களை அவர்கள் ஒட்டியதாகவும் கூறினர்.
இது தொடர்பில் உரிய வேட்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஜனநாயக நாடொன்றில் தேர்தல் பிரசாரத்தினை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறாது மேற்கொள்ளும் உரிமை சகலருக்கும் உள்ளது எனவும் இது தொடர்பில் வேட்பாளர்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேநேரம் அமைதியான தேர்தலொன்றினை அரசாங்கமும் பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment