காரைதீவுக் காரியாலயம் திறப்பு






 ( வி.ரி.ர் சகாதேவராஜா)


 சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திகாமடுல்லமாவட்டத்தின் காரைதீவுப் பிரதேசத்திற்கான காரியாலயமானது  காரைதீவு பிரதான வீதியில்  நேற்று  (2) சனிக்கிழமை மாலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது  தலைமை வேட்பாளர் சபாபதி நேசராசா  தலைமையில் இடம்பெற்றது . 

நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  வேட்பாளர்களான இரா.பிரகாஷ் (சிவில் சமூக செயற்பாட்டாளர் ),கி .லிங்கேஸ்வரன் (தலைவர் கல்முனை வர்த்தக சங்கம்) , இ.துரைசிங்கம்( சிவில் சமூக செயற்பாட்டாளர்)
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் கட்சி பிரமுகர்களான ஹென்றி மகேந்திரன் (ரெலோ), சங்கரி( புளட்) ,முன்னாள் திருக்கோவில் தவிசாளர் இ.வி.கமலராஜன் உள்ளிட்ட  கட்சி ஆதாரவாளரர்கள்  இந்நிகழ்வில்   கலந்துகொண்டனர்.