மட்டக்களப்பு கலல்லடிப் பகுதியில், தனியார் காணியொன்றை அரச காணியாகக் கருதி, அதன் கட்டுமானங்களை சேதப்படுத்தி ஏற்றிச் சென்ற சந்தேகத்தில் ஆஜரான சிவனேசத்துறை சந்திரகாந்தன் பிள்ளையான், பிரசாந்தன் உட்பட 7 பேரை பிணையில் செல்வதுற்கு மட்டக்களப்பு நீதிமன்ற கௌரவ நீதிபதி தர்சினி இன்று உத்தவரவிட்டார.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணியினை ஒருசிலர் சட்டவிரோதமாக அடைத்ததனை தடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அவரது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் உட்பட சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை ஒரு சிலர் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தி எல்லையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த மே மாதம் 27ம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.சிவலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என குறித்த இடத்திற்கு சென்று சட்டவிரோதமாக குறித்த பகுதியில் காணியினை வேலி அடைத்தவர்களை வெளியேற்றியதுடன் வேலிகள் மற்றும் பாதுகாப்பு கேமராக்களை மாநகர சபை வாகனங்களில் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதியில் வேலியை அடைத்தவர் இந்த காணி தன்னுடைய காணி என்றும் இப்போது இந்த காணியினை அரச காணி என கூறுகின்றார்கள் என்றும் இவ்வாறாக எனது காணியில் இருந்து பாதுகாப்பு கேமராக்கள் வேலிகளை அகற்றி உள்ளார்கள் எனவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், கே.கருணாகரம், இளைஞரணி செயலாளர் ச.சுரேஷ்குமார் உள்ளிட்ட 10 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்றைய தினம் அதற்கான விசாரணை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன் போது எதிர்வரும் தை மாதம் 29 திகதிக்கு வழங்கானது நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன், இளைஞரணி செயலாளர் ச.சுரேஷ்குமார் உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சொந்த சரீரப்பினையில் செல்வதற்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதுடன், முன்னால் மேயர் குறித்த வழக்கிற்கு வருகை தராதமையினால் அவருக்கு நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment