( வி.ரி.சகாதேவராஜா)
இந்த நிமிஷம் வரைக்கும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன் . எனவே இருக்கின்ற இரண்டு நாட்களை உச்சளவு பயன் படுத்துங்கள்.
இவ்வாறு பாண்டிருப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கி.லிங்கேஸ்வரனின் பிரச்சார அலுவலகத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சோமசுந்தரம் புஸ்பராஜா தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் பேசுகையில்..
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுமா ?என்பதை இந்த தேர்தல் தான் சொல்ல வேண்டும்.
கடந்த வருடம் தமிழரசுக் கட்சியும் அம்மானும் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள் .
இம்முறை தமிழரசுக் கட்சி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி தனியாக போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழக்க போகின்றது.
தமிழச்சி கட்சி வேட்பாளர் இந்துனேஸ் கிரசர் தூளையும் சாராயத்தையும் தொடர்ச்சியாக வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார். இன்றோடு அதனை அவர் கைவிட வேண்டும் . இன்றேல் இவர் தமிழினத் துரோகியாக கணிக்கப்படுவார் .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் கலையரசன் ஆகியோர் இருந்து என்ன செய்தார்கள்?
காரைதீவைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களை நான் மதிக்கின்றேன் நல்லதொரு சமூக சேவையாளர் .நான் போற்றுகிறேன். வாழ்த்துக்கள் .
ஆனால் அண்மையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை வெட்கப்பட வேண்டியது. ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஜனாதிபதி சபாநாயகர் அடுத்து எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன். அவரே அதனை செய்யவில்லை. அப்பொழுது இவர் இங்கு தவிசாளராக இருந்தார். அப்போதும் செய்யவில்லை .
இப்ப மட்டும் இது முடியுமா? அதுவும் இலங்கையில் தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்று யாரும் இல்லை இலங்கையர் மட்டுமே என்று கூறுகின்ற ஜனாதிபதி அனுர இருக்கும்
இன்றைய நிலையில் இது சாத்தியமா?
பெரிய நீலாவணையில் அரச உத்தியோகத்தர் அரவிந்தன் ஜேவிபிக்காக ஆதம்பாவா அன்ரனிக்காக வாக்குகளை சேகரிக்கிறார்.இதனால் சிங்களவர் முஸ்லீம் வருவதற்கு மாத்திரமே வாய்ப்பு இருக்கிறது என்பதனை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் .
இவரை காலமும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் பொத்துவில் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இருக்கிறார்கள் .
எம் சி கனகரத்தினம் திவ்வியநாதன் சந்திரநேரு பத்மநாதன் கோடீஸ்வரன் பியசேன சங்கர் எனப் பலர்.
ஏன் கல்முனை தொகுதியில் இம்முறை அந்த பாராளுமன்ற உறுப்பினர் வர முடியாது? இங்குள்ள வேட்பாளர்களுக்கு அப் பகுதி மக்கள் வாக்களிக்க ஏனையோர் ஆலோசனை வழங்க வேண்டும்.
திருக்கோவில் கடற்கரை பிரதேசத்தில் ஜெயதிலக என்பவர் ஆயிரக்கணக்கான காணியை வாங்கி வருகிறார் .இவர்கள் இதை அறிவார்களா? சந்திரிகாவின் குண்டு துளைக்காத வாகனத்தில் வலம் வந்த சம்மந்தர் ஒரு நாளாவது வந்து கல்முனை உண்ணாவிரதத்தை எட்டிப் பார்த்தாரா?
இல்லை. இவர்களை நம்பி இன்னும் ஏமாற வேண்டுமா? மக்களே! அம்பாறை மாவட்டத்தில் சங்குதான் தமிழ் மக்களை ஆளப் போகிறது .
ஆகவே அதற்கு வாக்களித்து நீங்கள் வெற்றிவாகை சூடுங்கள்.
விழாவில் வேட்பாளர்களான லிங்கேஸ்வரன், இரா. பிரகாஷ் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
Post a Comment
Post a Comment