.
சுகிர்தகுமார்
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் (14) காலை அமைதியான முறையில்; ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியுடன் பாரிய சம்பவங்கள் எதுவுமின்றி சுமூகமான முறையில் நிறைவுற்றது.
காலை வேளையி;ல் வாக்களிப்புக்கள் மந்தகதியில் இடம்பெற்றிருந்தாலும் நண்பகல் நேரத்தில் சற்று அதிகரித்துடன் 62.5 வீத வாக்களிப்பு இடம்பெற்றதாக அம்பாரை மாவட்டத்தின் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.
நான்கு தேர்தல் தொகுதியினை கொண்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்க ஒட்டுமொத்தமாக 555432 பேர் தகுதி பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
இதன் அடிப்படையில் அம்பாரை தேர்தல் தொகுதியில் 188222 வாக்காளர்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 வாக்காளர்களும் கல்முனை தேர்தல் தொகுதியில் 82830 வாக்காளர்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184653 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தை பொறுத்தவரையில் அம்பாரை தேர்தல் தொகுதியில் 184 வாக்களிக்கும் நிலையங்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்களிக்கும் நிலையங்களும் கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிக்கும் நிலையங்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிக்கும் நிலையங்களும் 528 வாக்களிக்கும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் 21 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 43 சுயேற்சை குழுக்களும் போட்டியிடும் நிலையில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 640 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் முகமாக கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையிலனை முன்னெடுத்திருந்தனர்.
அம்பாரை ஹாடி உயர்தொழிநுட்ப கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment