ஏஆர் ரஹ்மான் -சாய்ராபானு,முடிவுக்கு வருகிறது 29 ஆண்டுகால பந்தம்..!




 


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், 29 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தெரிகிறது.


 

நேற்று இரவு, ஏ.ஆர். ரகுமான் மனைவி சாய்ரா தனது கணவரை பிரிவதாக அறிவித்த சில மணி நேரங்களில் ஏ.ஆர். ரகுமான் அதனை உறுதி செய்தார். அவர் தனது எக்ஸ்பிரக்கத்தில், “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பாராத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களால் நடுங்கும். உடைந்தவை மீண்டும் சேர வாய்ப்பு இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் அன்பிற்கும் எங்கள் தனி உரிமைக்கு மதிப்பு அளித்தமைக்கு நன்றி,” என்று கூறியுள்ளார். 

 

அதேபோல், ஏ.ஆர். ரகுமான் மகன் ஏஆர் ஆமீன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்த நேரத்தில் எங்களது தனி உரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி,” என்று பதிவு செய்துள்ளார்.