அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாககவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றவியல் வழக்கு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயதான கௌதம் அதானிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அவரது வணிகப் பேரரசு மீதும் இருக்கிறது.
குற்றப் பத்திரிகையில், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும் அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதானி குழுமம் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
கடந்த 2023ஆம் ஆண்டு, உயர்மட்ட நிறுவனம் ஒன்று அதானி குழுமம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதிலிருந்து, அதானி நிறுவனம் அமெரிக்காவில் கண்காணிப்பின்கீழ் இருந்து வந்தது.
அந்த நிறுவனத்தின் கூற்றுகளை கௌதம் அதானி முற்றிலுமாக மறுத்தார். ஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிந்தன.
இந்த லஞ்ச விசாரணை பல மாதங்களாகவே நடந்து வருகின்றன. அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டில் இந்த விசாரணையைத் தொடங்கியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதானி குழும அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்படப் பல தரப்பிடம் இருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
கௌதம் அதானி மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்குபட மூலாதாரம்,Getty Images
மேலும், அதற்காக, தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளைப் பயன்படுத்தியதாகவும், இதன்கீழ் திரட்டப்பட்ட பணம் லஞ்ச எதிர்ப்பு கொள்கையை மீறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
அமெரிக்க வழக்கறிஞர் பிரையன் பீஸ், “குற்றச்சாட்டின்படி, பிரதிவாதிகள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டனர். மேலும், அவர்கள் அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் பொய் கூறியுள்ளார்கள்,” என்று தெரிவித்தார்.
மேலும், தனது அலுவலகம் சர்வதேச சந்தைகளில் இருந்து ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டர் பிரையன் பீஸ். இதுதவிர, “நமது நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையைப் பணயம் வைத்து லாபம் பார்க்க விரும்புவோரிடம் இருந்து முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
53 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கதேசம் வந்த பாகிஸ்தான் கப்பல் - இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
20 நவம்பர் 2024
மனைவி செல்போனை அனுமதி பெறாமல் கணவர் பார்க்கலாமா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்
19 நவம்பர் 2024
அமெரிக்காவில் முதலீடு செய்ய உறுதியளித்த அதானி
கௌதம் அதானி மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்குபட மூலாதாரம்,Getty Images
இந்த லஞ்சம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பல சந்தர்ப்பங்களில் அதானியே அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பராக கௌதம் அதானி கருதப்படுகிறார். அதானி தனது அரசியல் தொடர்புகளின் மூலம் பயனடைவதாக நீண்டகால அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார்.
அமெரிக்க வழக்கறிஞர் பதவிகள் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறையை மாற்றியமைப்பதாக உறுதியளித்து, வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.
கடந்த வாரம் டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் கௌதம் அதானி உறுதியளித்தார்.
Post a Comment
Post a Comment