1998 ஆண்டு க.பொ.த.சாதாரண தர பழைய மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நன்றி





வி.சுகிர்தகுமார்  


 அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 1998 ஆண்டு க.பொ.த.சாதாரண தரம் 2001 ஆண்டு க.பொ.த.உயர்தர மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு தேவையான பெண்கள் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு தரிப்பிடத்தை அமைத்து கொடுத்து திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (8) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் 1998 ஆண்டு க.பொ.த.சாதாரண தரம் 2001 ஆண்டு க.பொ.த.உயர்தர பழைய மாணவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் கல்வி  வலயத்தின் பிரதி கல்விப்  பணிப்பாளர் எஸ்.சுரதுநதன் ஏ.எம்.நௌபர்டீன் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கீ.கமலமோகனதாசன், பிரதி அதிபர்களான மதியழகன் மகேஸ்வரன்; பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், எஸ். அகிலன், பழைய மாணவர்  சங்க உறுப்பினர். வி.சுகிர்தகுமார் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புhடசாலையின் அதிபர் மற்றும் அதிதிகள் இணைந்து நாடாவினை வெட்டி பெண்கள் சைக்கிள் தரிப்பிடத்தை திறந்து வைத்ததுடன் நினைவுப்பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தனர்.
இங்கு உரையாற்றிய அதிபர் அதிதிகள் உள்ளிட்டவர்கள் பழைய மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நன்றி தெரிவித்ததுடன் இதுபோன்று பாடசாலையில் கல்வி பயின்று சமூகத்தில் இருக்கின்ற அனைத்து பழைய மாணவர்களும் முன்வந்து பாடசாலைக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
கல்வி அபிவிருத்திக்காக பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் முன்வந்து இவ்வாறான சிறப்பான பணிகளை முன்னெடுத்துவரும் நிலையில் இவர்களின் செயற்பாடுகளும் பாராட்டத்தக்கதுடன் மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் குறித்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்கள் மற்றும் முன்னின்று செயற்படுத்தி அத்தனை பேருக்கும் பிரதேச மக்கள் சார்பிலும் கல்விச்சமூகம் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக இங்கு உரையாற்றியவர்கள் கருத்து வெளியிட்டனர்.