( வி.ரி. சகாதேவராஜா)
lகல்முனை கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டால் எழுத்தறிவு தினத்தை விழிப்பூட்டும் செயற்பாடாக விவாத அரங்கு இடம் பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹுதுல் நஜீமின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று முன்தினம் (9
) புதன்கிழமை நடைபெற்றது.
கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூஎல். றியாலின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விவாத அரங்கில் இவ்வாண்டின் எழுத்தறிவு தின சம்பியன் கிண்ணத்தை கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியும், இரண்டாம் இடத்தை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியும், மூன்றாம் இடத்தினை கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரியும் பெற்றுக் கொண்டன.
இப்போட்டியில் பங்குபற்றி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை,, உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை, அல்- பஃறியா மகா வித்தியாலயம் ஆகியன ஆறுதல் பரிசினைப்பெற்றன.
Post a Comment
Post a Comment