ஸாஹிரா கல்லூரி மாணவர் சாதனை !






 நூருல் ஹுதா உமர்


கிழக்கு மாகாண, மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி - 2024 இல், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை தரம் 9 ஈயை சேர்ந்த இருமொழிக் கல்விப் பிரிவின் மாணவன் எம்.பி.சாஃபி, திறமை சித்தியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சாஃபியின் சிறப்பான சாதனையானது அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அறிவியலுக்கான ஆர்வம் ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த அபாரமான சாதனைக்காக அவரை பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகிறோம்.  மேலும் அவரது எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துவதோடு இந்த வெற்றியை பெற அவருடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் தெரிவித்துள்ளார்.