உளநலதின வீதி நாடக நிகழ்வு





 ( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் தேசிய தேசிய உளவள  தினத்தை முன்னிட்டு அலுவலக உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  வீதிநாடக நிகழ்வு  நேற்று (2024.10.22)  பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் "பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய நேரம் இது"  எனும் தலைப்பிலான இந்த வீதி நாடக நிகழ்வினை தேற்றாத்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் ஆற்றுகை செய்திருந்தனர். 

குறித்த நிகழ்வில் வேலைத்தளங்களில் ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் சிறப்பான முறையில் மாணவர்கள் ஆற்றுகை செய்திருந்ததுடன், அவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும்  கலந்து கொண்டிருந்ததுடன், இந்த நிகழ்வினை பிரதேச செயலக உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி என். கோகிலா ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.

மேலும் உளவள தினத்தினை முன்னிட்டு பாடசாலைகள் மற்றும் பொது இடங்களிலும் உளநலத்தினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.