"மழைச்சாரல் தொடர்கிறது"




 



நூருல் ஹுதா உமர்


தோப்பூர் ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய "மழைச்சாரல் தொடர்கிறது" என்ற கவிதை நூலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை தோப்பூர், தி/மு/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் அனுசரணையோடு விமர்சையாக நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் பீடாதிபதியுமான எம்.எல்.பௌசுல் அமீர் தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஹாஜா முகைதீன் கலந்து கொண்டு முதல் பிரதியை பிரபல தொழிலதிபரும், அல் - மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவருமான எஸ்.எச்.ஜெஸாஹீர் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மூத்த கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், கலை இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், , இலக்கியவாதிகள், நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள், நூலாசிரியரின் நண்பர்கள் மற்றும் நளீமிய்யா நண்பர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டதாரியான ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய இந்நூலானது தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் மூன்றாவது வெளியீடாகும்.