நூருல் ஹுதா உமர்
மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சிரச ஊடக வலையமைப்பு இணைந்து நடத்திய அகில இலங்கை ஊடக திறனாய்வு போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் உயர்தர பிரிவு மாணவன் எம்.ஆர்.எம். றிமாஸ் அறிவிப்பாளர் போட்டியில் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியாக 3ம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மாணவனை பாராட்டுவதோடு இப்போட்டிக்காக இம் மாணவனை வழிப்படுத்தி தயார்படுத்திய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் யு.எல்.எம். ஹிலால் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் எம்.ஐ. ஜாபீர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment