மட்டக்களப்பு நீதிமன்றுக்கு குண்டு அச்சுறுத்தல் - பலத்த பாதுகாப்பு




 


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலை பேசியையடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிசாருக்கு அறித்துள்ளார்


இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டித்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன் iன்று வெள்ளிக்கிழமை முதல் இந்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.


(கனகராசா சரவணன்